சுவையான ரவா கேசரி செய்வது எப்படி

வீட்டில் எளிமையாக சில மணி நேரத்தில் செய்யக்கூடிய சுவையான இனிப்பு வகைகளில் ஒன்று தான் ரவா கேசரி(Rava Kesari). நாம் வீடுகளில் சில சமயங்களில் திடீர் என்று உறவினர்கள் வருவர்கள். அவர்களுக்கு விரைவாக ஒரு இனிப்பு வகை செய்ய வேண்டும் என்றால் அது ரவா கேசரி தான்.

ரவா கேசரி செய்முறை பற்றி காண்போம்:

ரவா கேசரி செய்ய தேவையான பொருட்கள்:

ரவா 1 டம்ளர்
சாக்கரை 2 டம்ளர்
ரீபைண்டு ஆயில் 4 டேபிள் ஸ்பூன்
நெய் 4 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் 3 டம்ளர்
கேசரி பவுடர் 2 சிட்டிகை
எலக்காய் 3

வானலில் 3 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீரில் கேசரி பவுடரை கலந்து கொள்ளவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் ரவையை கொட்டி கிளரவும். எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். ரவை நன்றாக வெந்தவுடன் சர்க்கரை கொட்டி கெட்டியாகும் வரை கிளரவும். பிறகு அதனுடன் நெய் ஊற்றி முந்திரியை பொன் நிறமாக வறுத்து அதனுடன் சேர்க்கவும். பின்பு ஏலக்காயை பொடி செய்து அதனுடன் சேர்த்து கிளரிவிட சுவையான கேசரி ((Rava Kesari)) தயார்.

rava kesari

குறிப்பு: ரவையை வானலில் கொட்டி சிறிது நெய் சேர்த்து வறுத்துக்கொண்டால் சுவை அதிகமாக இருக்கும்.

Yaathith farms is a leading Country Chicken & Goat & in Kandamanglam village of Villupuram District, Tamilnadu having incorporated in the year 2018.