பொதுவான நாட்டு கோழிகளை தாக்கும் நோய்கள்

1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)

2) அம்மை நோய்

3) கோழி காலரா

4) சளி நோய்

5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் – ஈரல் நோய்

6) தலை வீக்க நோய்

7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள்

கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோழிகளைகோடை கால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும் இதை கொக்கு நோய் என்றும் கூறலாம்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள்தீவனம் எடுக்காது தண்ணீர் குடிக்காது வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும் எச்சம் இடும் பொது ஒரு காலைதூக்கிகொல்லும் ஒரு இறக்கை மட்டும் செயல் இழந்து தொங்கும் தலையை முறுக்கி கொள்ளும் இறந்த கோழிகளைபரிசோதனை செய்து பார்த்தால் இரைப்பையில் ரத்த கசிவு இருக்கும்.

நோய் வரும் முன் காப்பதே சிறந்தது.

20 லிட்டர் தண்ணீரில் 50 கிராம் சீரகத்தூள், 2 எலுமிச்சைப்பழங்களின் சாறு ஆகியவற்றைக் கலந்து தினமும் கொடுத்துவந்தால், பெரும்பாலான நோய்கள் அண்டாது. இது 100 கோழிகளுக்குப் போதுமானதாக இருக்கும்.

இரண்டு மாதங்களுக்கு மேற்பட்ட கோழிகளுக்குப் பஞ்சகவ்யா கொடுக்கலாம். 100 கோழிகளுக்கு… 20 லிட்டர் தண்ணீரில் 60 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து 15 நாள்களுக்கு ஒருமுறை தரலாம். இதனால், கோழிகளின் வளர்ச்சி சிறப்பாக இருப்பதோடு, முட்டைகளும் பெரிதாக இருக்கும். பஞ்சகவ்யா கொடுக்கும் நாள்களில் வேறு மருந்துகள் எதையும் கொடுக்கக் கூடாது

வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க:

வெள்ளைக்கழிச்சல் நோய் தாக்கினால் 1 லிட்டர் தயிர் அல்லது மோரில் 250 கிராம் சின்ன, வெங்காயத்தை நறுக்கிப்போட்டு 5 நாள்கள் ஊற வைத்துக் கொடுக்கலாம். இம்மருந்துகளை மழை மற்றும் பனிக்காலங்களில் கொடுக்கக் கூடாது

அம்மை நோய்க்கு நாட்டு மருந்து :

அம்மை நோய் வரும் முன்

ஜூரகம் – 1ஸ்புன்

வெந்தயம் – 1ஸ்புன்

இரண்டையும் ஊற வைத்து பின்

அரைக்க வேண்டும் அதனுடன்

மஞ்சள் தூள் – 1ஸ்புன்

பூண்டு – 1 பல்

வேப்பங்கொழுந்து – 1 கைப்பிடி

துளசி – 1 கைபிடி

முருங்கையிலை – 1 கைபிடி

மீண்டும் அரைத்து அரிசி குருணையில் கலந்து வைக்கவும்.

அம்மை நோய் வந்த கோழிகளுக்கு மேற்கண்ட அரைத்த விழுதினை சிறு உருண்டையாக்கி கோழிக்கு தலா 5 சிறு உருண்டை 4 வேளை 3 நாள் உள்ளே தள்ளி விட வேண்டும் . மேல் உள்ள அம்மை மருவிற்கு இதே விழுதினை வேப்ப எண்ணை 50 கிராம் விளக்கெண்ணெய் 50 கிராம் இந்த விழுதுடன் நன்கு காய்ச்சி வடிகட்டி மேற்பூச்சி ஆக உபயோகிக்கலாம்.