nutmeg in tamil

உலகில் எங்கும் காண முடியாத மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை தான் ஜாதிக்காய் Nutmeg in Tamil, . இது நமது நாட்டின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலேயே அதிகம் விளைகிறது. இது ஒரு அற்புதமான மூலிகை. கடந்த காலங்களில் சித்த மற்றும் ஆயர்வேத மருத்துவத்தில் ஜாதிக்காய் அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஜாதிக்காய் (jathikai) உஷ்ணத்தன்மை மிக்க மூலிகை என்பதால் பெரும்பாலும் இதனை பாலில் கலந்தே மருந்தாக பயன்படுத்தப்பட்டது.

ஜாதிக்காய் நன்மைகள்

தூக்கமின்மை பிரச்சனை

தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் ஜாதிக்காயை தூளாக அரைத்து கொண்டு இரவு தூங்குவதற்கு முன்பு சூடான பாலில் அரை தேக்கரண்டி அளவு கலக்கி சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும் அதைபோல் நரம்பு பிரச்சனை நீங்கி உடல் நன்றாக இருக்கும்

குழந்தை மருத்துவம்

சிறு குழந்தைகலுக்கு அவ்வப்போது வயிற்று போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்படும். அப்போது இந்த ஜாதிக்காய் (jathikai tamil maruthuvam) தூளை மிகவும் குறைந்த அளவில் பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்று போக்கு மற்றும் வலி குணமாகும். இதை தினந்தோறும் தரக்கூடாது. அதோடு அதிக அளவிலும் குழந்தைகளுக்கு தினமும் தர கூடாது.

நோய் எதிர்ப்பு சக்தி

ஜாதிக்காய் (Nutmeg in tamil) அமிலத்தன்மை மிக்க மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதால் பாலில் கலந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி, கெட்ட கொழுப்பு படிவதை தடுத்து ரத்தத்தை சுத்தமாக்குகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகறிக்கிறது.

வயிற்று பிரச்சனைகள்

வாயு தொல்லை, அஜீரணம், வயிற்றில் அமில சுரப்பி கோளாறுகள் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் ஜாதிக்காய் (Nutmeg in Tamil) தூளை சிறிது பால் அல்லது பால் கலக்காத தேநீருடன் அருந்தி வந்தால் இப்பிரச்சினைகள் நீங்கும். குடல்களில் பூச்சி தொல்லைகளால் அவதியுறும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதே முறையை உட்கொண்டால் குடல்புழுக்கள் நீங்கி நன்றாக செரிமானம் ஆகும்.

ஆண்மை குறைவு

இன்றைய கால கட்டத்தில் பணிச்சுமை, குடும்ப பிரச்சனைகள் காரணமாக ஆண்களுக்கு மனஅழுத்தம் அதிகரித்துள்ளது. அவர்களின் இனப்பெருக்க நரம்பு மண்டலம் பாதித்து ஆண்மை குறைவு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. இப்படி இருக்கும் ஆண்கள் தினமும் இரவு உறங்கும் முன்பு பாதாம் பருப்பை அரைத்து பாலில் கலக்கி அதனுடன் சிறிது ஜாதிக்காய் தூளை சேர்த்து ஒரு மண்டலம் அல்லது 48 நாட்கள் அருந்தி வந்தால் நரம்புகள் வலுப்பெற்று ஆண்மைக்குறைவு நீங்கும்.

Yaathith Farms producing the Large amount of nattu kozhi meat & eggs in Pondicherry and surrounding areas with 100% organic. Call @ 8056693629.