பொருந்தலைவர், தியாக செம்மல், கல்வி கன் திறந்த கர்மவீரர், கிங்மேக்கர், தென்னாட்டு காந்தி என பல பெயர்களுக்கு சொந்தகாரர் காமராஜர், அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி இந்த கட்டிரையில் பார்ப்போம். சுயநலம் கருதாமல் போது நலம் கருதி நாம் நாட்டிற்காக பல நன்மைகளை செய்தவர் கர்மவீரர் காமராஜர்.

kamarajar life history in Tamil:

பொருந்தலைவர் காமராஜர் 1903ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தார். பெற்றோர் பெயர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். பெற்றோர் இவருக்கு குலத் தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் வைத்தனார். தாயார் சிவகாமி அம்மாள் அவரை செல்லமாக ராசா என்றே அன்போடு அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி காமராசு என்று ஆனது.

இளம் வயதிலேயே தனது தந்தையை இழ்ந்ததால் காமாராஜரால் பள்ளி படிப்பை தொடர முடியவில்லை. குடும்ப வறுமை காரணமாக தனது மாமாவின் ஜவுளி கடையில் பணிக்கு சேர்ந்தார்.

சிறை வழ்க்கை

தன் மாமாவின் துணிக்கடையில் வேலை பார்த்து வந்த காமராசர் அங்கிருக்கும்போது பெ. வரதராசுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார், ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுகளில் கவரப்பட்ட காமராசர் தன்னை அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய 16ஆம் வயதில் காங்கிரசின் உறுப்பினராக தன்னை இனைந்து கொண்டார்.

1930ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட போது போலீசாரால் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டர் காமராசர். 1940 விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டு நிறுவப்படாததால் விடுதலை ஆனார். மீண்டும் 1942-இல் ஆகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். அப்போது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.