பஞ்சகவ்யா (Panchakavya in Tamil) என்பது பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. தற்போது வயல்வெளி ஆராய்ச்சிகளின் முடிவில் கூடுதலாக சில பொருட்கள் சேர்க்கப்படுகிறது. அவ்வாறு தயாரிக்கும் பஞ்சகவ்யா கூடுதல் பலன்களை தருகிறது. 20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிக்கும் முறையை பற்றி தற்போது காண்போம்.

செய்யத் தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்களை நாட்டுமாட்டில் இருந்து எடுத்து செய்தால் நல்ல பலன் தரும்.

பச்சை பசுஞ்சாணம் 5 கிலோ
பசுமாட்டு கோமியம்(சிறுநீர்) 3 லிட்டர்
காய்ச்சி ஆறவைத்த பசும்பால் 2 லிட்டர்
பசு மாட்டு தயிர் 2 லிட்டர்
பசு நெய் 500 கிராம்
நாட்டு சர்க்கரை 1 கிலோ
வாழைப்பழம் 12
இளநீர் 3 லிட்டர்
தென்னங்கள் 2 லிட்டர்

செய்முறை:

முதலில் ஒரு தொட்டி அல்லது பித்தளை பாத்திரத்தில் 5 கிலோ சாணம் போட்டு நன்றாக கலந்து பின்னர் அதில் பசுநெய் சேர்த்து நன்றாக கலக்கி 3 நாட்கள் நிழலில் வைக்க வேண்டும். 3 நாட்களுக்கு பிறகு அதனுடன் பால் சேர்த்து கலக்கி, பின்னர் தயிர் சேர்த்து கலக்கிவிட வேண்டும்.

அதனுடன் கோமியத்தை சேர்த்து கலக்கவும் பின்னர் நாட்டுச்சக்கரையை தண்ணீரில் போட்டு கரைத்து அதனுடன் சேர்க்க வேண்டும். அதனுடன் இளநீர் சேர்த்து கலக்கி விட வேண்டும். பின்னர் வாழைபழத்தை நன்றாக மசித்து அதில் கலந்து பின்னர் தென்னங்கல்லை சேர்த்து நன்றாக கலந்து வைக்க வேண்டும். அதன் மேல் ஒரு காட்டன் துணியை கொண்டு கட்டி வைக்கவும். தினமும் சூரிய உதயத்திற்க்கு முன்பு மற்றும் பின்பு நன்றாக கலக்கி விட வேண்டு. அவ்வாறு 21 நாட்கள் செய்தாள் 21வது நாளின் முடிவில் பஞ்சகவ்யா தயார் ஆகிவிடும்.

பஞ்சகவ்யாவின் பயன்கள்

பஞ்சகவ்யாவை அப்படியே 30மிலி தினமும் காலை மற்றும் இரவு உணவிற்கு முன்பாக 48 நாட்கள் எடுத்து வந்தால் உடலில் உள்ள அனைத்து பிரட்சனைகலும் குணமாகும்.

பஞ்சகவ்யா (Panchakavya in Tamil) மனிதர்களுக்கு மட்டும் இன்றி கால்நடைகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். கால்நடைகளுக்கு அதன் உணவு அல்லது தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.

பயிர்களுக்கு உறமாக்கும் பொருட்டு பஞ்சகவ்யாவை அப்படியே உபயோகிக்காமல் 3 லிட்டர் பஞ்சகவ்யாவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகொக்க வேண்டும் அவ்வாறு கலந்து கலவையை சுமார் 1 எக்கர் நிலத்திற்கு தெளிக்கலாம்.

குறிப்பு:

தென்னக்கல் கிடைக்காதவர்கள் இளநீரை ஒரு பாட்டிலில் ஊற்றி இரண்டு நாட்கள் முடிவைக்க உபயோகிக்கலாம்.

Yaathith Farms producing the huge amount of nattu kozhi meat & eggs in tamilnadu, pondicherry and surrounding areas with 100% organic.