கீழாநெல்லி மருத்துவ குணமுடைய அற்புதமான மூலிகைக் கீரை. எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் வளர்வதால் மருத்துவக் குணம் கொண்ட அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை.

இந்த வகை கீரை இந்தியாவின் வெப்பமண்டல பகுதிகளில் வளர கூடிய குறுஞ்செடி இனத்தை சேர்ந்தது. ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மையுடைய இந்த கீரையின் இலையில் அடிப்பகுதியில் காய்கள் காய்ப்பதால் இதனை கீழ்காய்நெல்லி என்று கூறுவர்கள். காலபோக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி என பொயர் மாற்றி கூறப்படுகிறது.

கீழாநெல்லி (keelanelli) செடி மஞ்சள்காமாலை நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. நிறைய ஆய்வுகூடங்களில் கீழாநெல்லி செடி அதன் தன்னையை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

keezhanelli

மருத்துவ பயன்கள்

கீழாநெல்லி இலையை பறித்து சுத்தம் செய்ய நன்றாக அரைத்துக் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். அத்துடன் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து காக்கும்.

கீழாநெல்லி செடியை காயவைத்து பொடியாக்கி உணவுக்கு முன் மூன்று வேளையும் எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்

கீழாநெல்லி வேரை அரைத்து பாலுடன் கலந்து மூன்று வேளையும் குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும். தொற்று நோய்கள் வாரது.

நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பால் ஆகியவற்றை அரைத்து வடிகட்டி குடித்தால் தலைவலி குணமடையும்.

மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை செடிகளை நாம் கண்டுகொள்வதில்லை. சின்ன உடல்நல பாதிப்பு என்றால்கூட, மருத்துவர்களிடம் செல்கிறோம்.

Yaathith Farms producing the huge amount of nattu kozhi eggs in Pondicherry and surrounding areas with 100% organic. Call @ 8056693629.