துளசி (Tulsi )ஒரு வகை மருத்துவ குணம் நிரைந்த மூலிகை செடியாகும். ஆசியா கண்டத்தில் அதிகம் காணப்படுகிறது இதனை ஹோலி பேசில் (Holy basil) என்றும் அழைப்பர்கள். 50 சென்ரிமீட்டர் உயரம் வரை வளர கூடிய துளசி செடியின் அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டதால் இதனை மூலிகை செடிகளின் ராணி என்றும் பெயர் செல்வர்கள். துளசி செடியை (tulsi plant) பற்றி நாம் தமிழில் விரிவாக பார்க்கலாம் (Holy basil in Tamil).

இந்து மதத்தினர் துளசி செடியை புனிதமாக நினைத்து பயன்படுத்தி வருகிறார்கள். பெண்கள் வீட்டின் நடுவில் துளசி செடியை வைத்து இறை வழிபாடு செய்கிறார்கள். பெருமாள் கோயில்களில் துளசி மாலை அணிவித்து இறை வழிபாடு செய்வர்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துளசி இலையை அப்படியே சாப்பிடலாம்.

துளசி செடி வகைகள்

நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி, காட்டுத் துளசி

Basil in Tamil – துளசி பயன்கள் – Benefits of Tulsi

துளசி இலைகள் சாறு காய்ச்சல், சளி, இருமல் மற்றும் சுவாச பிரச்சினைகளை நீங்கி உடல் ஆரோக்கியம் தரும். மேலும் துளசி இலை Tulsi plant சாப்பிடுவதால் மலேரியா, ஜீரண பிரச்சினை, காலரா போன்ற நோய்கள் நம்மை அண்ட விடாமல் பாதுகாக்கிறது.

தொண்டை புண்

தொண்டையில் புண் இருக்கும் போது துளசி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் விரைவில் குணமாகும்.

கண் எரிச்சல் பிரச்சனைகள்

கருப்பு துளசி இலையின் (Holy basil in tamil) சாறு எடுத்து கண்ணில் அரிப்பு, எரிச்சல் ஏற்படும் போது அந்த சாற்றினை கண்களில் ஊற்றி கழுவி வந்தால் அரிப்பு, எரிச்சல் விரைவில் நீங்கும்.

இதய நோய்

இதய நோய் உள்ளவர்கள் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் துளசி இலையை (tulsi plant) சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் இதய நோயில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

சிறுநீரக பிரச்சனை

சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று உள்ளவர்கள் துளசி இலை சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக தொற்று நீங்க உடல் நலம் போறும்.

மன அழுத்தத்தை குறைக்கும் துளசி இலை

மன அழுத்தம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அதிகம் உள்ளது. மன அழுத்தத்தால் வாழ்க்கையில் நிம்மதியின்றி இருக்கிறர்கள். துளசி இலையை (tulsi plant) தினமும் சாப்பிட்டு சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் அடாப்டோஜென் மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியாக வாழ உதவும்.

சொரி, சிரங்கு முகப்பரு நீங்க

சொரி, சிரங்கு இருப்பவர்கள் துளசி இலையை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பத்து போட்டு வந்தால் சொரி, சிரங்கு விரைவில் குணமாகும். துளசி இலை, அம்மான் பச்சரிசி இலை இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் தடவினால் முகப்பரு நீங்கும்.

Tulsi Leaf Images

Yaathith Farms producing the huge amount of nattu kozhi meat & eggs in tamilnadu, pondicherry and surrounding areas with 100% organic.