வெந்தயம் (Fenugreek in Tamil) மக்கள் தினமும் தான் உணவில் சேர்க்கும் ஒரு முக்கிய பொருள். வெந்தயத்தில் உள்ள இரும்பு சத்துக்கள் மனித உடலுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். மக்கள் தன் உடலை இரும்பு போல் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதைபோல் வெந்தயத்தில் நிறைய மருத்துவ குணம் நிறைந்துள்ளது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து அதிகம் உள்ளதால் இதை நாம் உண்பதால் நாம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும். மேலும் சுண்ணாம்பு சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாது உப்பு கலவைகலும் நிறைந்துள்ளது.

முளைகட்டிய வெந்தயத்தின் பலன்கள்:

பழங்கால நாட்டு மருத்துவத்தில் வெந்தயம் மற்றும் அதனுடைய விதைகள், இலை என அனைத்தும் அதிகம் பயன்படுத்தபட்டது. வெந்தயத்தை முளைகட்டி சாப்பிடுவதால் அதில் கிடைக்கும் பலன்கள் அதிகம்.

சாப்பிடுவதற்கு முதல் நாள் இரவு வெந்தய விதையை தண்ணீரில் அலசி எடுத்து ஈரத் துணி அல்லது கோணிப்பையில் கட்டி வைக்க வேண்டும். மறு நாள் காலையில் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும். அதனை எடுத்து சாப்பிட்டு வந்தால் நாம் உடலுக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. முளைகட்டிய வெந்தயம் சாப்பிடுவதால் நாம் உடலுக்கு தேவையான விட்டமின் சி, ப்ரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஆல்கலாய்ட்ஸ் மற்றும் அதனுடன் ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜெனினும் அதிகமாக இருப்பதால் நாம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும்.

Fenugreek in Tamil

சர்க்கரை நோயை குறைக்கும்:

முளைகட்டிய வெந்தயத்தை சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இன்ஸுலின் சுரப்பி அதிகரித்து ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள உதவும். டைப் 2 வகை சர்க்கரை நோயாளிகள் முளைகட்டிய வெந்தயத்தை தொடர்ந்து 24 வாரங்கள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு குறைந்திடும்.

எடை குறைக்கும்:

முளைகட்டிய வெந்தயத்தில் (Fenugreek in Tamil) 75 சதவீதம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிசாக்ரைடுடன் அதிகம் உள்ளதல் சிறிது அளவு சாப்பிட்டால் நாம் வயிறு நிறப்பிவிடும். அதிகப்படியான உணவு சாப்பிடுவது தவிர்க்கப்படும். இவை நமக்கு ஒரு நாளுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

உடல் கொலஸ்ட்ராலை & வெப்பத்தை குறைக்கும்:

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நாம் உடலில் உள்ள வெப்பம் குறையும்.

வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினமும் காலை வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீரில் கலந்து கலந்து குடித்து வந்தால் கொலஸ்ட்ராலை குறைக்கும். மேலும் வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

நீரிழிவு நோய் வராமல் தடுக்கும்:

வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க துண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

​சீரண சக்தியை மேம்படுத்துகிறது:

வெந்தயம் உடல் செரிமானத்திற்கு உதவுகிறது. அஜூரணம் போன்ற கோளாறுகள் நீங்கி உணவு செரிமானம் அதிகரிக்க உதவுகிறது. வெந்தயம் சூட்டை ஏற்படுத்தும் தன்மை உள்ளதால் மலச்சிக்கல், வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படாமல் தடுக்கிறது.

Yaathith farms is a leading Country Chicken & Goat & in Kandamanglam village of Villupuram District, Tamilnadu having incorporated in the year 2018.