உடல் பிரச்சனை, வயிற்று பிரச்சனைளுக்கு பூண்டு அனைவருக்கும் மிக நல்லது. எந்த ஒரு காய்கறி இல்லாமல் வெறும் பூண்டு, வெங்காயம் மற்றும் நல்லெண்ணை வைத்து மிக எளிமையான முறையில் செய்யப்படும் குழம்பு பூண்டு குழம்பு(Poondu Kuzhambu). நல்லெண்ணை பயன்படுத்தி செய்ததால் சுவையாக இருக்கும். பூண்டு குழம்பு எப்படி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

பூண்டு குழம்பு தேவையான பொருட்கள்:

பூண்டு – 10 பற்கள்
சின்ன வெங்காயம் – 12
கறிவேப்பிலை – சிறிது
புளி – 1 நெல்லிக்காய் அளவு
குழம்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

பூண்டு குழம்பு (Poondu Kuzhambu) செய்முறை:

முதலில் ஒரு வாணலை அடுப்பில் வைத்து சூடேற்றி அதில் நல்லெண்ணை ஊற்றி காய்ந்ததும் எடுத்து வைத்த கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு புளிச்சாறு ஊற்றி அதனுடன் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருக்கும் நல்லெண்ணை பிரியும் போது அடுப்பை நிறுத்தி விட வேண்டும். சுவையான பூண்டு குழம்பு (Poondu Kuzhambu) ரெடி ஆகிவிட்டது.

Poondu Kuzhambu

Yaathith Farms producing the huge amount of nattu kozhi meat & eggs in tamilnadu, pondicherry and surrounding areas with 100% organic.