தமிழக மக்கள் பழங்கால முதல் இன்று வரை விருப்பி உண்ணும் உணவு தான் இட்லி (Idli Recipe). இது தென் இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு வகையாகும். இட்லி அரிசி மற்றும் உளுந்தினால் அரைக்க பட்டு ஆவியில் வேகவைக்கப்படும் ஒரு உணவு தான் இட்லி. இட்லி ஒரு மிகச்சிறந்த எளிமையான காலை மற்றும் இரவு உணவு. இட்லி மிகவும் எளிதில் ஜீரனமாக கூடிய உணவு வகை. காய்ச்சல் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம்.

இட்லி செய்முறை பற்றி காண்போம்:

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி 2 1/2 டம்ளர்
கருப்பு அல்லது வெள்ளை உளுந்து 1/2 கிலோ
உப்பு தேவையான அளவு
வெந்தியம் 2 டீஸ்பீன்

முதலில் அரிசியை கழுவி அதை தண்ணீரில் ஊற வைக்கவும், அதை போன்று உளுந்து மற்றும் வெந்தியத்தையும் ஊற வைத்துக் கொள்ளவும். இதை அனைத்தையும் குறைந்த பட்சம் 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு முதலில் உளூந்தை அதன் தோல் நன்றாக நீங்கும் படி கழுவிக் கொள்ளவும். உளுந்தைகழுவும் பொது ஒரு முறை மட்டும் தண்ணீர் ஊற்றி கழுவவும். கடைசியாக புதிதாக தண்ணீர் மாற்றி கழுவிற் கொள்ளலாம். கழுவிய உளுந்தை வெந்தியம் சேர்த்து அறைத்துக் கொள்ளவும். அறைக்கும் பொழுது தண்னீரை தேவைக்கற்ப ஊற்றி அறைக்கவும். உளுந்து அறைந்து முடித்தற்கான அடையாலம் உளுந்தில் முட்டை முட்டையாக வந்திருக்கும். வெள்ளை உளுந்து என்றால் ஊற வைத்ததை அப்படியே அறைத்துக் கொள்ளலாம். வெள்ளை உளுந்தை காட்டிலும் கருப்பு உளுந்தே உடலுக்கு நல்லது, பின்பு ஊற வைத்த அரிசியை நன்கு அறைத்து கொள்ளவும். அதன்பின் தேவையான அலவு உப்பு தேர்த்து இரண்டையும் ஒன்றாக கறைத்துக் கொள்ளவும். அது பொங்கி வந்தவுடன் இட்லி பானையின் அடியில் தண்ணீர் சிறிதளவு வைத்து அது சுட்டவுடன் இட்லி தட்டில் இட்லியை உற்றி வைத்து பின்பு அதை 5 நிமிடம் வேக வைத்து எடுத்து பார்த்தால் பன் பொன்ற இட்லி (Idli Recipe) தயார்.

இட்லியை கார சட்னி, பொதினா சட்னி, சாம்பார், தேங்காய் சட்னி, கடலை சட்னி, தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

Idli Images

Yaathith farms is a leading Nattu kozhi muttai & Goat & in Kandamanglam village of Villupuram District, Tamilnadu having incorporated in the year 2018.