வெற்றிலையில் வைட்டமின் சி, இரும்பு சத்து, கால்சியம் சத்து, பொட்டாசியம் சத்துகள் நிறைந்துள்ளது. வெற்றிலையுடன் மிளகு, திப்பிலி, பூண்டு, பெருங்காயம் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து சூப் வைத்து குடித்து வந்தால் வாயு தொல்லையை நீக்கும். டான்சில்ஸ், வீக்கம் போன்ற நோய்யுள்ளவர்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

வெற்றிலை – 6,
திப்பிலி – 2 டீஸ்பூன்,
பூண்டு – 10 பல்,
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்,
பெருங்காயதூள் 1/2 டீஸ்பூன்,
தேவையான அளவு உப்பு

சூப் செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்க வைக்க வேண்டும் பிறகு எடுத்து வைத்த பூண்டை நசுக்கி அதனுடன் திப்பிலி, பெருங்காயதூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும் பிறகு வெற்றிலை நன்கு வதங்கும் வரை வேக வைக்க வேண்டும். அந்த சூப்பை வடிகட்டி அதனுடன் மிளகுத்தூள் சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Yaathith Farms producing the huge amount of nattu kozhi meat & eggs in tamilnadu, pondicherry and surrounding areas with 100% organic.