நமது வீட்டில் பழங்காலத்தில் பாட்டி நிறைய வைத்தியம் வைத்திருப்பார்கள். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம். தற்போது பெரியவர்கள் இளைஞர்கள் குழந்தைகள் என அனைவரும் டாக்டர் தரும் மருந்தை பயன்படுத்துகிறார்கள். அது நாம் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று பலருக்கும் தெரியாது. பொதுவாக சளிக்கு கூட தற்போது ஆங்கில மருந்தை எடுத்துக்கொள்கிறார்கள். ஆங்கில மருந்து எடுத்துக்கொண்டால் சளி கூட நாம் உடலுக்குள்ளேயே இருக்குமே தவிர முழுவதுமாக சரியாவதில்லை என்று பலருக்கும் தெரியாது. சளிக்கு மருந்து எடுக்காவிட்டால் கூட ஒரு வாரத்தில் குணமாகிவிடும் என்று யாருக்கும் தெரிவதில்லை.

நெஞ்சு சளி

பழங்காலத்தில் பாட்டி தேங்காய் எண்ணெய் எடுத்து சூட வைத்து அதில் சிறிது கற்பூரம் சேர்த்து நெஞ்சில் தடவி வர செல்வர்கள் அப்படி தடவி வந்தால் நெஞ்சு சளி குணமாகும்.

எலுமிச்சை பழம் சாரை எடுத்து சுடு தண்ணீரில் தேன் கலந்து குடித்து வந்தால் நெஞ்சு சளி, வரட்டு இருமல் கரையும். பாலுடன் மஞ்சள் மற்றும் மிளகு தூள் கலந்து ஒரு வாரம் குடித்து வந்தால் நெஞ்சு சளி கரையும்.

நெல்லிக்காய் சாரை எடுத்து சிறிது மிளகு தூள் மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் மூக்கடைப்பு நீங்கி சளி குணமாகும்.

புதினா இலை, மிளகு இரண்டையும் அரைத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சளி, இருமல் நீங்கும்.