முள்ளங்கி Mullangi or Radish ஆசியாவை பூர்விகமாக கொண்ட ஒரு தாவரம் ஆகும். இது Raphanus sativus எனப்படும் தாவர வகையை சார்ந்து. பழங்காலத்தில் எகிப்து, கிரீஸ், ரோம் நாடுகளில் முள்ளங்கி பயிர் செய்யப்பட்டது. இப்போது இந்தியா, இலங்கை என அனைத்து நாடுகளிலும் முள்ளங்கி கிழங்கு பயிர் செய்யப்பட்டு வருகிறது.

முள்ளங்கி Mullangi or Radish இலை, கிழங்கு, விதை என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்தம் சுத்தமான எப்போதும் ஓடி கொண்டு ஒருக்கும்.

முள்ளங்கி மண்ணுக்கு அடியில் இருக்கும் ஒரு கிழங்கு வகையை சேர்ந்தது. இதில் புரதம், கொழுப்பு, தாதுஉப்புகள், நார்ச்சத்து முதலியவை உள்ளன. முள்ளங்கி கிழங்கை Mullangi or Radish பச்சையாகவோ சாறாகவோ உணவில் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

முள்ளங்கியின் மருத்துவ பயன்களை பற்றி பார்க்கலாம்:

மனித உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும் தாது உப்புக்களையும் முள்ளங்கி Mullangi or Radish தருகிறது அதனுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. முள்ளங்கியில் கால்சியம் மற்றும் கந்தகமும், பாஸ்பரஸ் சத்துகள் அதிகம் உள்ளது.

முள்ளங்கி குளிர்ச்சி தன்மையுடையது. உடல் உஷ்ணம் உள்ளவர்கள் முள்ளங்கி சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை தணிக்கும். வெள்ளை முள்ளங்கி தான் மருத்துவ குணம் நிரைந்தது. சிவப்பு முள்ளங்கி ருசிக்க மட்டும் பயன்படுத்தப்படும்.

முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. முள்ளங்கி கீரையில் கால்சியம் அதிகம் இருப்பதால் அதை உண்பது உடலுக்கு நல்லது.

குழந்தைகளுக்கு வரும் சளி, வயிற்று பிரச்சனைகளுக்கு முள்ளங்கி சாறு சிறந்த மருந்தாகும். பெரியவர்கள் முள்ளங்கி சாறுடன் தேன் அல்லது சர்க்கரை கலந்து குடித்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும்.

ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உண்டு. இதனால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் முள்ளங்கி ஒரு சிறந்த உணவகும்.

சிறுநீர் பிரச்சினை உள்ள பெரியவர்கள் முள்ளங்கி Mullangi or Radish சாற்றைக் குடித்து வந்தால் இந்த பிரச்சனை தீரும்.

Yaathith Farms producing the huge amount of Nattu kozhi muttai & meat in pondicherry & Tamilnadu.