பசுத்தீவனத்தின் பசுமை தன்மை மாறாமல் மகவும் குறைந்த ஊட்டச்சத்து இழப்புடன் சைலோ (Silage in Tamil) எனப்படும் காற்று புகா குழியில் பதப்படுத்தும் முறையே சைலேஜ் அல்லது ஊறுகாய்ப் புல்.

சைலேஜ் (Silage in Tamil) தயாரிக்க அறுவடை செய்யும் தருணம்

வீரிய புல் வகைகளாக இருப்பின் அதனை பூக்கும் தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும். பயறுவகைத் தீவனமாயிருப்பின் 25 முதல் 20 சதவிகித பீக்கும் தருணத்தில் அறுவடை செய்யவேண்டும். சோளம், கம்பு தாமியங்களாய் இருப்பின் பால் பிடிக்கும் தருனத்திலும் மக்காசோளமாய் இருப்பின் பால் பிடித்த பிறகும் அறுவடை செய்ய வேண்டும்.

Silage in Tamil
Farmer’s hands holding corn maize silage

சைலேஜ் செய்யும் முறை

சைலேஜ் (Silage in Tamil) தயாரிக்க பசுத்தீவனத்தை காற்று புகாத இடத்தில் மூடி வைத்து சேமிக்கலாம். இம்முறையை குழிவடிவிலோ, கோபுரவடிவிலோ, சரிவு வடிவிலோ காண்கிரிட் வளையங்கள் வடிவிலோ, குதிர் வடிவிலோ, அல்லது பாலிதீன் பைகளை பயன்படுத்தலாம்.

பசுத்தீவனத்தை சுமார் 2மணி நேரம் முதல் 3மணி நேரம் வரை சூரிய இளியில் உலர்த்தி ஈரப்பத அளவை குறைக்க வேண்டும். பின்பு அதனை 2-3 அங்குலமாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி சைலோவில் அடிக்கி வர வேண்டும்.

பசுத்திவனத்தின் பயன்கள்

படுந்தீவனம் கால்நடைகளுக்கு மிகவும் முக்கியமானது. கால்நடைகளுக்கி பசுந்தீவனம் அளிப்பதன் மூலம் சீரான உற்பத்தியை பெறலாம். பசுந்தீவனத்தினால் கால்நடைகளின் செரிமானத் தன்மை அதிகமாகும். மழைக்காலங்களில் பசுந்தீவனம் அதிக அளவில் கிடைக்கும். அதனி பதப்படுத்த கோடைகாலங்களில் பயன்படுத்தலாம்.

பசுந்தீவனத்தை பதப்படுத்தும் முறைகள்

பசுந்தீவனத்தை இரண்டு முறைகலில் பதப்படுத்தி சேமிக்கலாம்:

  1. காய்ந்த புல் அல்லது உலர் புல்
  2. சைலேஜ் அல்லது ஊறுகாய்ப் புல்

காய்ந்த புல் அல்லது உலர் புல்

பசுந்திவனப் பயிரை பூ பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து அதனை உலர வைத்து அதன் ஈரப்பதத்தை குறைத்த சேமிக்கலாம் பசுந்தீவனத்தை சூரிய ஒளியில் காயவைய்ப்பதின் மூலம் முதல் நாள் ஈரப்பதம் சுமார் 30 முதல் 40 சதவீதம் மட்டும் இருக்கும். இரண்டாம் நாளும் மீண்டும் சூரிய ஒளியில் உலர வைக்க வேண்டிம் இதன்மூலம் அதன் ஈரப்பதம் 20 சதவீதமாக மாறும் மூன்நாம் நாள் காலையில் கூம்பு வடிவத்திலோ அல்லது குதிர் போட்டு சேமித்து வைக்க வேண்டும். தரமான உலர்புல் வெளிறிய பச்சை நிறத்தில் பூஞ்சை காளான் இல்லாமல் இருக்கும்.

சுமார் 20 முதல் 30 cm தீவனத்தை அடுக்கிய பிறகு காற்று வெளியேறும் வரை அழுத்த வேண்டும் அதன் மீது 2 சதவிகிதம் சஈக்கரை பாகு கரைசலையும் 1 சதவிகித உப்புக் கரைசலையும் தெளிக்க வேண்டும். பிறகு பசுந்தீவனத்தை அடுக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து அடுக்கி சைலோவின் மேல்மட்டத்தை விட 1.5மீ அதிகமாக உயர்த்தவும். அதன் மேல் பகுதியில் வைக்கோல் போட்டு மூடி ஈரமண்ணை பூசி காற்று புகாமல் அடைக்க வேண்டும். தரமான சைலேஜ் 20 நாட்களில் உருவாகிவிடும். சைலேஜ் பழவசனையுடன் இருக்கும். இதில் அமில தன்மை 3.5 முதல் 4.2 வரை இருக்கும்.

கறவை மாடுகளுக்கு 15-20 கிலோ, கிடேரி மாடுகளுக்கு 5-8 கிலோ, வளர்ந்த ஆடுகளுக்கு 200-300 கிராம் வரை சைலோவை போடலாம். இவ்வாறு போடுவதன் முலம் பசு மற்றும் ஆடுகள் உற்பத்தி அதிகமாகும்.

Yaathith Farms producing the huge amount of nattu kozhi meat & eggs in tamilnadu, pondicherry and surrounding areas with 100% organic.