தூதுவளை இதன் தாவரியல் பெயர் (Solanum trilobatum) எனப்படும். தூதுவளை (Thuthuvalai) ஒரு மூலிகை செடியாகும். தூதுவளை இந்தியாவில் வெப்பமண்டல உள்ள இடங்களில் அதிகம் வளர்கிறது. தூதுவளை (Thuthuvalai plant) இலை மற்றும் கொடி போன்ற படர்ந்து வளரும். வேலி மற்றும் செடி, மரகளை பற்றிக்கொண்டு படர்ந்து வளரும். ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் செழிப்புடன் தூதுவளை வளரும். இதன் இலைகள் கரும்பச்சை நிறத்தில் இருக்கும். தூதுவளைக்கு பல பெயர்கள் உண்டு அவை தூதுளம், தூதுளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று கூறுவார்கள். தூதுவளை சிறு சிறு வளைந்த முட்களை கொண்ட ஒரு செடியாகும். தூதுவளையின் இலை, பூ, காய், வேர் என அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தது.

தூதுவளை மூலிகை செய்யும் முறை

தூதுவளை இலையை பறித்து நிழல் பாங்கான இடத்தில் உலர்த்தி வைக்க வேண்டும். பின்பு அதன் முள்களை எடுக்க வேண்டும். தூதுவளையில் முள் இருப்பதால் இதில் நச்சுத்தன்மை இருப்பதாக கருதப்படுகிறது. முள்களை நீக்கி விட்டு எண்ணெய் அல்லது நெயில் போட்டு வறுத்து பின்னர் அதைனை சாப்பிடுவதால் சளி, ஆஸ்துமா, நாள்பட்ட சளி, காய்ச்சல் குணமாகும்.

Yaathith Farms producing the huge amount of nattu kozhi meat & eggs in tamilnadu, pondicherry and surrounding areas with 100% organic.