பழங்கால தமிழ் மக்களின் உணவு முறைகளை தற்போது நாம் பின்பற்றுவது இல்லை. அதனால் தான் இப்போது நிறைய உடல் சம்பந்தமான நோய்கள் வருகிறது. நோய்களை கட்டுப்படுத்த தினமும் சமையலில் சேர்க்கப்பட்ட ஒரு பொருள் தான் ஒமம் (ajwain in tamil). நாம் உடலை‬ சீராக வைத்து கொள்ள ஒமம் (omam) உதவுகிறது. இதை பார்பதற்க்கு சீரகம் போன்று இருக்கும். உணவில் ஓமம் சேர்த்து சாப்பிடும் போது நாம் உடலுக்கும் தேவையான ஊட்டச்சத்துகள், இரும்புச்சத்து மாவு சத்து என நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. நாம் உடலில் எற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த மருந்தாக ஓமம் பயன்படுகிறது. ஓமம் நன்மைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

வயிற்று கோளாறுகள்:

குழைந்தைகள் வயிற்று கோளாறுகலால் துடித்து அழும், அது என் அழுகிறது என்று தெரியாது. வயிற்று வலி, வாய்வு இருக்கும் அப்படி அழும். ஓமத்தை நீரில் போட்டு காய்ச்சி ஆற வைத்து குடிக்க வைத்தால் வயிற்றுப் பிரச்சனை தீரும். இதனை அனைவரும் செய்யலாம்.

வாய் பிரச்சனை

நாம் வாய் மற்றும் நாக்குகளில் புண் இருந்தால் ஓமம்(ajwain in tamil) மற்றும் சோம்பு அரைத்து பொடி செய்து அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் புண் குணமாகும். பற்களில் ஈறு பிரச்சனை இருந்தால் கூட இதை சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

ஆஸ்துமா பிரச்சனை

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் ஓமத்தை நன்கு கொதிக்க வைத்து கசாயம் செய்து தினமும் குடித்து வந்தால் நோய் கட்டுக்குள் இருக்கும்.

மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் பிரச்சனை

மூச்சுத்திணறல் உள்ளவர்கள் சிறிது ஓமத்தை எடுத்து வறுத்து ஒரு துணியில் கட்டி மார்பு பகுதியை சுற்றி ஒத்திரம் கொடுத்து வந்தால் மூச்சுத்திணறல் குணமாகும். காய்ச்சல் மற்றும் குளிர் காய்ச்சல் உள்ளவர்கள் ஓமம் மற்றும் சோம் சேர்த்து பொடி செய்து அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்.

Ajwain Images

Buy country chicken online in Yaathith Farms. Best quality nattu kozhi egg with 100% Organic.