வல்லாரை கீரைக்கு (Vallarai Keerai Recipe) சரஸ்வதி கீரை என்று மாற்று பெயர்கள் உண்டு. இது ஒரு மருத்துவ குணம் நிறைந்த கீரை வகை தாவரமாகும். ஆஸ்திரேலியா, ஆசியா நாடுகளின் நிறைய விளைய கூடியது. வல்லாரை கீரையை ஆங்கிலத்தில் (Centella asiatica) என்றும் சரஸ்வதி கீரையை (Asiatic pennywort or Indian pennywort) என்றும் பெயர் உண்டு.

வல்லாரை கீரையில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, உயிர்சத்து எ, உயிர்சத்து சி, தாதுஉப்புக்கள் என நாம் உடலுல் உள்ள இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை சம அளவில் உல்ளது.

வல்லாரை கீரை பயன்கள் | Vallarai Keerai benefits

வல்லாரை கீரை (Vallarai Keerai) தாவர வகை என்பதால் துவர்ப்பு, கசப்பு, இனிப்பு என அனைத்து சுவைகளை கொண்டுள்ளது. வல்லாரை கீரை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தியைப் அதிகரிக்கும்.

வல்லாரை கீரையில் நிறைய நன்மைகள் உள்ளன அவற்றில் வாய்ப்புண், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, விரை வீக்கம் என உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது.

வல்லாரை கீரையை சுத்தம் செய்து அதில் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு உப்பு தேவையான அளவு சேர்த்து சட்னியாக (vallarai chutney)or (vallarai thuvaiyal) அரைத்து 48 நாட்கள் அதவாது ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

வல்லாரை கீரையுடன் (Vallarai Keerai Recipe) கீழாநெல்லி இலை சம அளவு சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் இருக்காது.

தினமும் பச்சையாக 10 வல்லாரை கீரை இலைகளை சாப்பிட்டு வந்தால் மூளை நரம்புகள் பலம் பெறும். தொண்டை அடைப்பு பிரச்சனைகள் குறையும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் (emoglobin) எண்ணிக்கையை அதிகரிக்கவும் வல்லாரை கீரை உதவுகிறது.

வல்லாரை கீரையை காயவைத்து பொடியாக்கி வைத்து கொண்டு தினமும் பல் துலக்கினால் கறைகள் நீங்கி பல் ஈறுகளைப் பலப்படும்.

காசநோய் உள்ளவர்கள் வல்லாரை கீரையை சாப்பிட்டு வந்தால் குணமாக வாய்ப்புள்ளது. இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை போக்கும் வலிமை வல்லாரை கீரைக்கு உள்ளது.

கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் வல்லாரை கீரையை சாப்பிட்டு வந்தால் கண் நரம்புகள் பலம் பெறும்.

நாம் உடலில் ஏற்படும் கட்டிகள், புண்கள் ஆகியவற்றை சரி செய்து விடும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு. வல்லாரை கீரையுடன் மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகு பதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் வல்லாரை கீரை உண்பது நல்லது. வல்லாரை (Vallarai) மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை சரிசெய்கிறது.

வல்லாரை கீரையை எண்ணெயாக்கி தினமும் தலையில் தடவி வந்தால் உடல் சூடு குறையும். உடல் எரிச்சல் நீங்கும்.

Vallarai Keerai Images

Yaathith Farms producing the large amount of Nattu kozhi muttai & meat in pondicherry & Tamilnadu. Nattu Kozhi Valarpu in pondicherry, tamilnadu & surrounding areas.