Ponnanganni Keerai

ஒரு வாரத்தில் குறைந்தது ஒரு முறையாவது கீரைகளை உண்ண வேண்டும். கிராமபுறங்களில் வாழும் மக்கள் பலர் இதனை கடைப்பிடிக்கிறார்கள். நகர்ப்புற மக்கள் இதனை பின்பற்றுவதில்லை. நாம் உடலுக்கு தேவையான சத்துக்கள் தினமும் நாம் உண்ணும் உணவின் மூலம் தான் கிடைக்கிறது.

நாம் உண்ணும் உணவு சரிவிகித அளவில் இருக்கவேண்டும். ஆண்கள், பெண்கள் குழந்தைகள் அனைவருக்கும் சரிவிகித அளவு உணவை சாப்பிட வேண்டும். இதில் கீரை முக்கியப் பங்கு வகிக்கிறது. கீரைகள் பல வகை உண்டு. அதில் சிறந்த ஒன்று பொன்னாங்கன்னி கீரை (Ponnanganni Keerai). இது சருமத்திற்கு பளபளப்பான நிறத்தை தரக்கூடியது. இதன் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.

பொன்னாங்கண்ணி கீரை பலன்கள்

  1. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
  2. பொன்னாங்கண்ணி கீரை உடல் எடையை குறைக்க மட்டுமில்லாமல் அதிகரிக்கவும் உதவுகிறது. பொன்னாங்கன்னி கீரையில் துவரம் பருப்பு, நெய் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும், எலும்புகள் உறுதியாகி உடல் வலிமை பெரும்.
  1. பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாயில் இருந்து வரும் துர்நாற்றம் நீங்கும்.
  2. செல்போன், கணிணி பார்ப்பவர்கள், இரவில் சரியாக தூக்கம் வராதவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை பொறியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் சிவத்தல் நீங்கி நன்றாகப் தூக்கம் வரும்
  3. பொன்னாங்கண்ணி கீரையை கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து சமையல் செய்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.
  4. பொன்னாங்கண்ணி கீரை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாக தெரியும்.
  5. பொன்னாங்கண்ணி கீரை கீரையை சாப்பிடுவதால் இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெற்று சுறுசுறுப்பாக செயல்பட உதவும். மேலும் மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்யை குணப்படுத்த உதவுகிறது.

Ponnanganni Keerai Images

Yaathith Farms producing the huge amount of Nattu kozhi muttai & meat in pondicherry & Tamilnadu.